சொர்கம் நடுவிலே

நம் எல்லோருக்கும் வாழ்வென்பது மரணத்தை நோக்கிய பயணம் எனத் தெரியும் தான் - ஆனால், மரணம் என்றால் என்ன? அது நேரும் போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது? அது நடந்த பின் என்ன நேருகிறது? மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா? என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினால் வாழ்க்கை நரகமாகிவிடுகிறது பலருக்கு, அல்லது வாழ்வைப் பற்றிய எண்ணம் மாறுகிறது சிலருக்கு.     பைபிள் மற்றும் புராண இதிகாசங்களிலும் மரணத்தைப் பற்றியும் அதன் பின், தவறு செய்தவர்களுக்கு நரகமும், நன்மை … Continue reading சொர்கம் நடுவிலே

தேகம்

பின்நவீனத்துவ பாணியில் எழுதினால், நான்லீனியர் மாடலில் வசதியாக எதை வேண்டுமானாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல்  எந்தப்பக்கத்திலும் ஆரம்பிக்கலாம்...இழுக்கலாம்...முடிக்கலாம்...என்று சிலர் நினைத்து எழுதுகிறார்கள். இது எழுதுபவர்க்கு வசதியானது, ஆனால் படிக்கும் நமக்குத் தான் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவு முதிர்ச்சி வளரவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.  இருந்தாலும் மனம் தளராமல் திரும்பவும் படித்தாலும் ஒட்டவே இல்லை...ஏனென்றால் இந்நாவலின் எழுத்தில் sincerity இல்லை. ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்களம் மாறுபட்ட ஒன்று - வதை; இந்தச் சமுதாயத்தில் வதை என்பது எங்கும் … Continue reading தேகம்

18ஆவது அட்சக்கோடு

18 ஆவது அட்சக்கோடு வழக்கம் போல் அசோகமித்திரனின் எளிமையான அல்லது எளிமை போல் மாயத்தோற்றம் தரும் எழுத்துக்களுடன் வலிமையான களத்தை கொண்டுள்ள நாவல்.  ஒரு சராசரியான பதின்பருவப் பையன் சந்திரசேகரின் பார்வையில் தான் கதை சொல்லப் படுகின்றது. இந்தச் சந்திரசேகரன் அசோகமித்திரனின் சாயல் என்றே நினைக்கிறன். இந்தியா விடுதலை பெற்றுவிட்ட போதிலும்  ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்தியங்க விரும்பி மக்களிடம் மதவெறியை தூண்டிவிடுகிறார். அதுவரை அந்தக் காலனியில் நெருக்கமானவர்கள் கூட மதவேற்றுமை பாராட்டி எதிரி ஆகிறார்கள். … Continue reading 18ஆவது அட்சக்கோடு

தண்ணீர்

அசோகமித்ரன் அவர்களை நேரில் பார்த்தது கிடையாது, அவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததுக் கூட கிடையாது; இருந்தாலும் அவரின் படைப்புக்களை மீறி என் மனதிற்கு அவர் நெருக்கமானவராகவே இருந்தார். அவரின் குழந்தையின் தேஜஸுடன் கூடிய முகமும், மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய பேச்சும், வாழ்வையும், மனிதர்களையும் நுணுக்கமுடனுடனும் நுட்பத்துடனும் பார்க்கும் கோணமும் அதே கோணத்துடனான அவரின் படைப்புகளும், அந்த நெருக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவர் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு என்னையுமறியாமல் மனதை படபடக்கச் செய்தது. இந்த இரண்டு நாளும் அவரின் நினைவாகவே … Continue reading தண்ணீர்

இன்று

'இன்று' அசோகமித்ரனின் நாவல் - நாவல் என்று அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆனால் எளிய வாசகனாகிய என்னைப் போன்றவர்களுக்கு முதல் பார்வையில் இது ஒரு கட்டுரை மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு என்பது போல்தான் தோன்றுகிறது.   ஆனால் இதை ஏன் நாவல் என்று முன்வைக்கப்பட்டது என்று வாசித்து முடித்து ஒரு பின்னோக்குப் பார்வை பார்த்தால், பின்வருபவன மனதில் எழுகிறது... 4 சிறுகதைகள் மற்றும் 2 கட்டுரைகள் / உரைகள் இந்நாவலில் இடம்பெற்றிருக்கிறது; ஆனால் ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்பு இல்லை. … Continue reading இன்று

ஒரு புளியமரத்தின் கதை

தமிழ் இலக்கிய புனைவுகளை எப்படி prioritize பண்ணினாலும் இந்த மகத்தான நாவலுக்கு முதலிடமோ அல்லது top 5க்குள் ஓரிடமோ உண்டு. எல்லோரும் எல்லாவிதத்திலும் இந்த நாவலைப் பற்றிய பெருமைகளையும், ஆரோக்ய விமர்சனங்களையும் 1966 (இந்நூல் வெளியான ஆண்டு) முதற்கொண்டு தமிழ்ச் சூழலில் வைத்துவிட்டார்கள். நான் இனிமேல் எதைச் சொன்னாலும் சூரியன் கிழக்கினில் உதிக்கிறான் என்பது போலத்தான். ஒரு மரம்...புளிய மரம், நூற்றாண்டு காலம் அசையாமல் நின்று கொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் நகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்து, வாழ்ந்து, … Continue reading ஒரு புளியமரத்தின் கதை

குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

'நாளை மற்றுமொரு நாளே' மாதிரியான களம் கொண்ட நாவல் - 'ஒரு மாதிரியான' என்று ஒதுக்கக்கூடிய காலத்தில் - 1960களில் எழுதப்பட்ட நாவல். சமுதாயத்திற்கு பயந்து யாவரும் ஒதுக்கும் ஏரியா, ஆனால் கள்ளத்தனமாக ஒதுங்க விரும்புவது இந்த 'குறத்தி முடுக்கு'. அதனால்தான் ஜி.நாகராஜன், 'இதையெல்லாம் எழுதவேண்டுமா என்று கேட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள்; வேண்டுமானால் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டுக்கொள்ளுங்கள்' என்று முதலிலேயே, யோக்கியமாக நடிக்காதீர்கள் என்று கூறிவிடுகிறார். கதையின் crux இதுதான் - ஊரின் மத்தியில் … Continue reading குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

கன்னி – J. பிரான்சிஸ் கிருபா

பித்தின் உச்சம் நாவலின் ஓரிடத்தில் அமலாவைப் பற்றி ஆசிரியர் JFK (ஜெ. பிரான்சிஸ் கிருபா) இவ்வாறு விளிக்கிறார் "பனிமலர் போலும் இளவரசி போலும் காட்சித் தந்தாள்" என்று.  ஆம்...இந்தக் கன்னி ஒரு இளவரசி - இளவரசி எங்கிருப்பாள்? அரண்மனை தர்பாரிலே, ராஜ சிம்மாசனத்தில் பொலிவோடு பேரழகியாக வீற்றிருப்பாள் தானே? அப்படி ஒரு அழகியை நாம் சாதாரணமாக தரிசனம் செய்யமுடியுமா...ம்ஹூம்...முதலைகள் இருக்கும் அகழியைத் தாண்டவேண்டும், கோட்டை கொத்தளங்களைக் கடக்க வேண்டும், வாயில் காப்போனிடம் அனுமதிப் பெற்று, பின்பு ராஜ வீதியை … Continue reading கன்னி – J. பிரான்சிஸ் கிருபா

சில நேரங்களில் சில மனிதர்கள் – JK

I didn't accept responsibility for my actions, because i'm not that much strong enough to face the consequences - இப்படி ஒரு escapism உள்ள ஒரு characterரிடம், ஏதும் அறியாத பதின் வயதில் தன்னை இழந்த கங்காவின் முரண்பாடான வாழ்வைப் பற்றிய புதினம். இந்த கதைக்களமே 1970களில் யதார்த்தத்தை மீறியதாக இருந்திருக்கும் - 40 வருடங்கள் ஆனபின்பும் இப்போதும் இது யதார்த்தத்தை மீறியதாகத்தான் உள்ளது. சமூகம் எனும் மாயச் சூழல் … Continue reading சில நேரங்களில் சில மனிதர்கள் – JK